2023 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான சனத்தொகை மற்றும் குடியிருப்பு மதிப்பீடு முன்னெடுக்கப்படுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சர் என்ற வகையில், இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் குடியிருப்பு மதீப்பீடு முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும், கொரோன அச்சுறுத்தல் , பொருளாதாரத நெருக்கடி, சமூக பிரச்சிகைள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை உள்ளிட்டவை காரணமாக குறித்த காலத்தில் இந்த சனத்தொகை மற்றும் குடியிருப்பு மதிப்பீடு முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
கடைசியாக 2011 ஆம் ஆண்டு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த கணக்கெடுப்பின்படி, நாட்டின் சனத்தொகை 20.2 மில்லியன் ஆகும்.
1871 ஆம் ஆண்டிலேயே இலங்கைக்கென சனத்தொகை மதீப்பீடு ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், தற்போது முன்னெடுக்கப்படவுள்ள சனத்தொகை மதிப்பீடானது, இலங்கையின் 15 ஆவது சனத்தொகை மதீப்பீடு என்பது குறிப்பிடத்தக்கது.