“தமிழர்களாகிய எமக்குப் பிச்சை வேண்டாம்; உரிமைதான் வேண்டும்” என்று நாடாளுமன்றத்தில் முழங்கினார் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்.
சபையில் இன்று (20) உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி ரணில், ரணில் ராஜபக்சவாக இருந்தால் என்ன, ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தால் என்ன. அவர் எதுவாக இருந்தாலும் எமக்குப் பிரச்சினை இல்லை.
இந்த நாட்டில் எம் தமிழருக்கு உரிமை உண்டு. ‘தமிழருக்கு நான் இதுதான் தருவேன் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று எமக்குப் பிச்சை போட்டு எம்மை ஏமாற்ற வேண்டாம்.
ஜனாதிபதி ரணிலும் விரைவில் வீடு செல்ல வேண்டி வரும்.
எமக்கான உரிமைகளைச் சரியான முறையில் தராவிடின் நாட்டுக்கான கடன் அதிகரிக்குமே தவிர முதலீடுகள் கிடையாது.” – என்றார்.