யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள விவசாய பீடத்தில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்வு கடந்த 22 ஆம் திகதி, சனிக்கிழமை நடைபெற்றது.
அமெரிக்கா தூதுவராலயத்தில் இருந்து யாழ்ப்பாணம் அமெரிக்கன் கோணர் ஊடாக வழங்கப்பட்ட நிதியுதவின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ். வசந்தரூபா, செயற்றிட்ட இணைப்பாளர் கலாநிதி ரெ. சுவந்தினி மற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள், விவசாயிகள், விவசாயத் துறை சார்ந்து வேலை செய்யும் பங்காளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தப் பயிற்சி பட்டறையில் 51 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு விவசாயத் துறை சார்ந்து இருக்கும் பிரச்சனைகள் மற்றும் மாணவர்களுக்கு இந்தப் பிரச்சனைகள் சார்ந்து மற்றும் வேறு வகைகளில் இருக்கக் கூடிய வாய்ப்புகள் பற்றி பயனுள்ள வகையில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், விவசாயத்துறையில் உள்ள பிரச்ச்னைகளுக்கு தீர்வு காணப் பங்களிக்கும் நவீன தொழில்நுட்பங்கள் பற்றி வயம்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி எஸ். சுரந்தவினால் விளக்கமும் செயன்முறைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பின்னர் யாழ் அமெரிக்கன் கோணர், யாழ்ப்பாணம் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பயிற்சியாளர்களால் தலைமைத்துவம், கருத்து வெளிப்பாடு, தன்னம்பிக்கை சார்ந்து செயற்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டன.