விடிவுகளின் தேடல் குழுமத்தின் மூலம் தேறாங்கண்டல் பாடசாலையினது அத்தியாவசியத்தேவை கருதியும் பாடசாலையில் இடம்பெற்ற (பொங்கல் நிகழவில்) வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் முகமாகவும் ரூ 32000 ரூ பெறுமதியான தளபாடங்கள் பாடசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டது.
மல்லாவி பிரதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் (Pirakash Vanni )
பிரகாஷ் என்பவரின் நிதியுதவியினாலேயே இவ் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“கடந்த 75 ஆண்டுகளாக இனவழிப்பிற்கு உட்பட்டுக்கொண்டிருக்கின்ற எமது ஆகப்பெரும் தமிழினத்தின் பலம்… எமது புலம்பெயர்தேச உறவுகளே… அந்தவகையில் தான் வாழ்ந்த மல்லாவி பிரதேசத்து பாடசாலையொன்றின் மாணவர்களது கல்வி வளர்சிக்காக பாடுபடுகின்ற மனநிலை பாராட்டத்தக்கது” என விடிவுகளின் தேடல் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் அலெக்ஷன் கூறுகிறார்.