செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மதுபான நிலையங்களில் விசேட சுற்றிவளைப்பு

மதுபான நிலையங்களில் விசேட சுற்றிவளைப்பு

0 minutes read

நாடளாவிய ரீதியில் மதுபான நிலையங்களில் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.

“கடந்த வருடம் ஒரு ஸ்டிக்கரை அறிமுகம் செய்தோம். மதுபான போத்தலை வாங்கும் போது இது உண்மையான சரியான தயாரிப்பு என்று ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும்.

“ஆனால், இப்போது ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக வேறு ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.

“அதனை தடுக்க இந்த வாரம் முதல் ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்துவோம். யாரேனும் அதனை செய்தால் கவனமாக இருங்கள். அவர்களை கைது செய்து சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவோம்” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More