0
தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இந்தியத் தூதுவரின் அழைப்பின் பிரகாரம் நடைபெறும் இந்தச் சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் எனக் கூட்டணியின் தலைவரும கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.