இன்று திங்கட்கிழமை (7.8.2023) திருகோணமலையில் உள்ள விமானப்படை நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SLAF அகடமியில் காலை 11.25 மணிக்கு புறப்பட்ட பின்னர் 11.27 மணிக்கு விபத்துக்குள்ளான விமானம் PT-6 பயிற்சி விமானமாகும். பயிற்றுநர். மற்றும் பயிற்சியாளர் இருவரும் கொல்லப்பட்டனர். மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழுவொன்றை நியமித்துள்ளார்.
சீனக்குடாவில் உள்ள இலக்கம் 1 பறக்கும் பயிற்சிப் பிரிவில் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் PT-6 விமானம் இன்று திங்கட்கிழமை (7) காலை வான் சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதாக விமானப்படை ஊடக குழுமத்தின் பணிப்பாளர் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.