யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 ஆயிரத்து 113 பேருக்கு குடிதண்ணீர் இல்லாமல் அல்லல்படுகின்றனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நெடுந்தீவு, ஊர்காவற்துறை, சாவகச்சேரி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 21 ஆயிரத்து 714 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து 113 பேர் குடிதண்ணீர் இல்லாமல் அல்லல்படுகின்றனர்.
குறித்த பிரதேச செயலர்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதி மக்களுக்கான குடிதண்ணீர் விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.” – என்றார்.
அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் ஓரிரு நாட்களில் மழை பெய்யாவிடின் நிலைமை மேலும் மோசமாகும் என்று யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.