1
இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் Tareq Md Ariful Islam இன்று மதியம் 11:30 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
நட்புறவான சந்திப்பாக இந்த சந்திப்பு அமைந்திருந்தது.இதன் போது பங்களாதேஷ் கடற்படை சார்ந்த உத்தியோகத்தரும், கிழக்கு மாகாண பிரதம செயலாளரும் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.