நீர்கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த இளைஞர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இன்று (12) முற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட இரண்டு நபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
நீர்கொழும்பு – துன்கல்பிடிய பகுதியில் உள்ள மீன் பிடிக்கும் இடத்துக்கான பிரவேச பற்றுச்சீட்டை விநியோகிக்கும் 25 வயதுடைய நபரே சம்பவத்தில் படுகாயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்றும், சந்தேகநபர்களைத் தேடி நீர்கொழும்பு பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.