ஆற்றில் தனது உறவினருடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிச் சாவடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊவா பரணகம – ரத்தம்ப தியகொலராவ ஆற்றில் மூழ்கியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா, கந்தப்பளைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே நேற்று (13) மாலை இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் ஊவா பரணகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.