கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார்.
சந்திரமோகன் தேனுஜன் (வயது 21) என்ற மாணவனே உயிரிழந்தார்.
கிளிநொச்சி, விவேகானந்தநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் நேற்று (19) தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
2021 ஆம் ஆண்டு ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் ஆங்கிலம் உள்ளிட்ட 4 பாடங்களிலும் 4 ஏ சித்திகளைப் பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றவர் இவர். மொரட்டுவ பல்கலைக்கழக அனுமதி கிடைத்து, அங்கு கல்வி பயில இவர் சென்றிருந்தார்.
எனினும், இந்த வருடத்தில் தன்னால் கல்வியைத் தொடரச் சிரமமாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டு, அடுத்த வருடத்திலிருந்து பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்து விட்டு வீடு திரும்பியிருந்தார்.
மன அழுத்தத்துக்கான மருத்துவ ஆலோசனைகளையும் இவர் பெற்றிருந்தார்.
இந்தநிலையில் தனது வீட்டில் நேற்று தற்கொலை செய்துள்ளார். இவரது தந்தை, தாய் இருவரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.