2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஆகஸ்ட் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் முன்னதாக தெரிவித்தார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, இந்தப் பரீட்சை நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை நடைபெறவுள்ளது.