இலங்கைக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி மார்க் – அன்ட்ரூ ப்ரான்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சம்பந்தன் எம்.பியின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.
இதன்போது இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அதேவேளை, வடக்கு – கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் சம்பந்தனும், சுமந்திரனும் எடுத்துரைத்தனர்.