“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலியும் வேதனையும் அரசுக்குத் தெரியும். அந்த உறவுகள் வடிக்கும் கண்ணீரை எந்தத் தரப்பும் கொச்சைப்படுத்த முடியாது. கொடூர வேதனையில் துடிக்கும் அந்த உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.”
– இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று நீதி கோரி வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“நீதி அமைச்சர் என்ற ரீதியில் எனது கருத்தை நான் முன்வைத்துளேன். தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவினத்திலும் பலர் காணாமல்போயுள்ளனர் – காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.” – என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.