கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் சகல உள்ளூர் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளையும் உடன் நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தீர்மானித்துள்ளது.
தற்போது நடத்தப்பட்டுவரும் மேஜர் கழக 3 நாள் கிரிக்கெட், அழைப்பு கழக பி அடுக்கு 3 நாள் கிரிக்கெட் போட்டி இதில் அடங்குகின்றன.
மேன்முறையீட்டு ஆலோசனைக் குழு ஒன்றின் தீர்மானத்திற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு 2023 ஆகஸ்ட் 25ஆம் திகதியிடப்பட்ட எழுத்து மூல அறிவுறுத்தல் ஒன்றை விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக விளக்கம் பெறப்படும்வரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் சகல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளையும் இடைநிறுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.