அதிகாரத்துக்காக ஏப்ரல் குண்டு தாக்குதல் நடை பெற்றது என்றும் இதனுடன் பிள்ளையான் என சொல்லப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புண்டு அவரையும் விசாரியுங்கள் என நளின் பண்டார கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார நேற்றய தினம் ( 05.09.2023) ஆயுர்வேத (திருத்தச் சட்டமூலம் ) மீதான விவாதத்தின் போதே அவர் இதனை ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும் தங்கள் கூறியதை இன்று சனல் 4 மஹிந்தானந்த அழுத்தகமே வெளியீட்டு காணொளி வெளிப்படுத்தியுள்ளது என்றும் .
அன்சிப் அசாத் மௌலானா என்ற நபர் பிள்ளையானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் மேலும் அவரே பிள்ளையானின் நிதி விவகாரம் அனைத்தையும் பார்வையிட்டு வந்ததாகவும் மேலும் 2017 பிள்ளையான் சிறையில் இருந்த போது சஹ்ரான் மற்றும் அவன் தரப்புடன் நட்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிள்ளையான் சிறையில் இருந்த பொழுதுகளில் புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே மூலம் விடுதலை கோரிக்கை விடுத்துள்ளார். எனவே ஏப்பிரல் 21 குண்டு வெடிப்பு தொடர்பில் சுரேஷ் சலே , பிள்ளையான், அசிப் அசாத் மௌலானா ஆகியோர் விசாரணை செய்யப்பட வேண்டும் .
சர்வதேச மட்டத்தின் கருத்தும் இதுவாகவே உள்ளது. இது தொடர்பில் ரணில் விக்கிரம சிங்க எந்த விதமான நடவடிக்கையும் வெளிப்படையாக எடுக்கப்போவதில்லை காரணம் அவர் ராஜபக்ஸாக்களுடன் ஆட்சி அதிகாரம் வந்தவர் ஆவார்.
முஸ்லீம் – சிங்கள முரண்பாட்டுகள் ஏற்பட்டது. எனவே முஸ்லீம் தரப்பு சர்வதேச விசாரணையுடன் நீதியை பெற முயற்சிக்க வேண்டும். இவ்வாறாக கருத்து வெளியிட்டுள்ளார்.