ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அவரின் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் 72 ஆவது தேசிய மாநாடு நடந்து முடிந்த கையோடு இந்தப் பதவி நீக்கத்தை கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன அறிவித்திருக்கின்றார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் தயாசிறி ஜயசேகர பங்கேற்றிருந்தார். கட்சி இனி ஒற்றுமையாக பயணிக்கும் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.