“நாடாளுமன்றத்தில் மாலை 4 மணிவரை நானும் கட்சித் தலைவரும் (மைத்திரிபால சிறிசேன) ஒன்றாகவே இருந்தோம். கலந்துரையாடலில் ஈடுபட்டோம். ஆனால், இரவில் என் கழுத்தை அறுப்பார் (பதவி நீக்கம்) என நினைக்கவில்லை.”
– இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கட்சி உறுப்புரிமையில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ள தயாசிறி ஜயசேகர எம்.பி. மேலும் கூறுகையில்,
“பொதுச்செயலாளர் பதவியை விட்டுகொடுக்குமாறு கட்சித் தலைவர் கோரி இருந்தால் அதனை செய்திருப்பேன்.
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து என்னை நீக்கியுள்ளமை சட்டவிரோத நடவடிக்கை. இதனை சட்டரீதியில் எதிர்கொள்வேன்.
கட்சிக்கு எதிராக நான் சதி செய்யவில்லை. தலைமைப் பதவியைக் கைப்பற்ற முற்படவும் இல்லை.
சு.கவிலிருந்து அரசு பக்கம் சென்றவர்கள்தான் சூழச்சி செய்கின்றனர்.” – என்றார்.