இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கேரளாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா அபிவிருத்திகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் 1970ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள மலையக மக்கள் (1,480 குடும்பங்கள்) கேரளாவில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் ஆர்.பி.எல். நிறுவனத்திலும், கேரளா வன அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திலும் தொழில் புரிகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வரும் பணிகளுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துக் கூறியதுடன், ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கு வருகை தருமாறு விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.