எம்பிலிப்பிட்டி – சந்திரிகா வாவியில் மூழ்கி 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தச் சிறுவன் தனது தாய் உள்ளிட்ட இருவருடன் சந்திரிகா வாவியில் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது, பொலிஸ் உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது