செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தியாகி திலீபனை நினைவேந்த நல்லூரில் திரண்ட தமிழ் உறவுகள்!

தியாகி திலீபனை நினைவேந்த நல்லூரில் திரண்ட தமிழ் உறவுகள்!

1 minutes read

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!” என்று முழக்கமிட்டு – பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி – தன் உடலை அணு அணுவாக உருக்கி – தாயக மண்ணை முத்தமிட்டு – வீரகாவியம் படைத்த தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் இன்று உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன. பிரதான நிகழ்வு யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இடம்பெற்றது.

நல்லூர் திலீபன் நினைவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் அணிதிரண்டு கொட்டும் மழையில் நனைந்தவாறு தியாக தீபத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில், தியாகி திலீபன் உயிர் பிரிந்த நேரமான காலை 10:48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் நாட்டுப்  பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகன் பொதுச்சுடர் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து தியாக தீபத்தின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை, சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நினைவிடத்துக்கு அருகில் உள்ள திலீபனின் ஆவணக் கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் இரண்டு தூக்குக் காவடிகள் நினைவிடத்துக்கு வந்ததுடன், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்துக்கு 6 இற்கும் மேற்பட்ட தியாக தீபத்தின் ஊர்திப் பவனிகள் வந்தன.

நினைவுச் சுடர் ஏற்றுவதற்கு சுமார் அரை மணி நேரத்துக்கு முன்பாக கடும் மழை பொழிய ஆரம்பித்த போதிலும் மழையையும் பொருட்படுத்தாது, நினைவிடத்தில் ஒன்றுகூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் தியாக தீபத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More