கிளிநொச்சியில் தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நீதிபதிக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் 02.10.2023 இன்றைய தினம் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா அவர்கள் தொடர் அச்சுறுத்தல்களாலும் தனது மனைவி பிள்ளைகளுடன் தனது பதவியினை ராஜினாமா செய்து விட்டு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர போன்றவர்களின் கொக்கரிப்பின் காரணமாகவும் சட்டமா அதிபரின் அச்சுறுத்தல் காரணமாகவும் நாட்டில் இருந்து வெளியேறி உள்ளார் இதனை கண்டித்து சுயாதீனமாக நீதித்துறையினை இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க தமிழரசு கட்சி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இதில் கிளிநொச்சிமாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக சங்கங்கள் தொழிற் ஸ்தாபனங்கள் அனைவரையும் காலை ஒன்பது முப்பது மணி தொடக்கம் 10:30 மணி வரை ஆன ஒரு மணித்தியால போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பை கேட்டுள்ளது