“அரசைக் காப்பாற்றுவதற்காகத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பொய் கூறுகின்றார் அல்லது அவருக்குச் சட்டம் தெரியாது.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மையில் ஊடகமொன்றுக்கு விக்னேஸ்வரன் வழங்கி செவ்வியொன்று குறித்து சர்ச்சை ஏற்பட்டிருக்கும் நிலைமையில் இந்த விடயம் தொடர்பில் விக்னேஸ்வரனுக்கு எனக் குறிப்பிட்டு சுகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“எனக்கு உங்கள் அளவுக்குச் சட்டத்துறையில் அனுபவம் இல்லாவிட்டாலும், எனது 12 வருடக் குறுகிய அனுபவத்தில்
இதனைக் கூறுகின்றேன்.
குருந்தூர்மலை வழக்கில் வழங்கப்பட்டது “தீர்ப்பு” (Judgement) அல்ல “கட்டளை”யே (Order) ஆகும். நீதிபதி ஒருவர் தன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பையோ அல்லது கட்டளையையோ “கைபிறழ்பாடானது” (Per Incuriam) என்பதன் அடிப்படையில் மாற்றுவதற்குச் சட்டத்தில் இடமுண்டு.
நிலைமை இவ்வாறிருக்க, நீங்கள் இவ்வாறு உண்மைக்குப் புறம்பாகக் கூறுகின்றீர்கள் என்றால், நீங்கள் அரசைக் காப்பாற்றுவதற்காகப் பொய் கூறுகின்றீர்கள். அல்லது உங்களுக்குச் சட்டம் தெரியாது. உங்கள் பதில் என்ன?
மக்களின் பதில் என்ன?” – என்றவாறாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சுகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.