அம்பாறை மாவட்டம், ஒலுவிலில் மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். அதேவேளை, பாதிப்புக்குள்ளான மூவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளையில் இவர்கள் மின்னல் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர்.
ஒலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுபைதீன் நிஜாமுதீன் (வயது 34) எனும் குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கத்துக்குள்ளான ஏனைய மூவருமான ஒலுவில் 7 ஆம் பிரிவைச் சேர்ந்த இல்முடீன் (வயது 32), ஒலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த எஸ். எம் அஹமட் (வயது 50), ஒலுவில் 4 ஆம் பிரிவைச் சேர்ந்த கே.அஸ்மின் (வயது 36) ஆகியோர் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.