0
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம் – இராஜாங்கனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.ரி. மாரப்பன (வயது 62) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் என்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக இராஜாங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.