செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் | சமூகத்தின் அக்கறையின்மையே காரணம்

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் | சமூகத்தின் அக்கறையின்மையே காரணம்

1 minutes read

சமூக நடத்தைகளே பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதற்கான பிரதான காரணம் என தேசிய ஆபத்தான ஓளடத கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

சமூகம் குறித்த போதிய அறிவும் புரிந்துணர்வும் இல்லாதமையும் பெற்றோர்களின் ஆதரவு இல்லாதமையும் சிறுவர்கள் பாதிக்கப்படும் நிலையை உருவாக்கியுள்ளது எனதேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை  தலைவர் சக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பல்வேறு அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற சமூகத்திற்கு சமூகம் வேறு அணுகுமுறைகளை கையாள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடும்பங்கள் உறவினர்கள் போன்ற உள்ளக சமூகம் சிறுவர்களிற்கு போதைப்பொருட்களின் ஆபத்துக்கள் குறித்து  தெரிவிக்கவேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் சிறுவர்கள் போதைப்பொருள் பாவனையாளர்கள் தொலைக்காட்சி விளம்பரங்கள் போன்றவற்றிற்கு அடிமையாகாமல் அவற்றை தவிர்க்கும்  உறுதியான மனோநிலை பெற்றவர்களாக மாற்றலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்ட அமுலாக்கல் மற்றும் கல்விமுறையில்  தொடர்ச்சியாக காணப்படும் பலவீனங்களால் நகர்புறங்களில் போதைப்பொருள் வர்த்தகர்கள் அதிக பணத்தை சம்பாதிக்கின்றனர் பெருமளவு விற்பனை செய்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த சில மாதங்களில் சில சம்பவங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More