“கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கிழக்கில் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கின்றனர்.” – என்று அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குச் சார்பாகச் செயற்படுகின்றார் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் சிங்கள மக்களை அச்சுறுத்தும் வகையில் சாணக்கியன் அறிவிப்புகளை விடுத்து வருகின்றார் என்றும் தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் தேரர் முறைப்பாடு செய்துள்ளார்.