சமூக முன்னேற்றகழகங்களின் சமாச தலைவர் சிவநெறி செல்வர் இ. சாந்தகுமார் தலைமையில் மாவை பாரதி மறுமலர்ச்சி மன்ற வளாகத்தில் ஸ்தாபகர் எழுச்சி வேந்தர் சமநீதி கலாநிதி இ. மு நாகலிங்கம் அவர்கள் முன்னிலை வகிக்க இன்று நிகழ்ந்த கல்விச்சாதனை மாணவர் பாராட்டுவிழா முதன்மை விருந்தினராக வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சு மோகனதாஸ்,யாழ்ப்பாணப் பல்கலைகழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் ஆகியோர் கலந்துகொண்டு தரம் 5,க.பொ.த சாதாரண தரம் ,க.பொ.த உயர்தர பரீட்சைகளில் சாதனை நிலை நாட்டிய மாணவர்களை கௌரவித்தனர்.
விழாவின் விருந்தினர் தமது உரைகளிடை கல்வி வழியான நிலை பேறான சமூக மாற்றத்தின் பேராற்றலை எமது வரலாற்றில் பதிவாக்கிய சமூக எழுச்சி இயக்கத்தினையும் தீர்க்க தரிசனத்துடன் இயக்கத்தினைக் கட்டி எழுப்பிய எழுச்சி தந்தையின் பெறுமதியான பணிகளையும் விதந்து பதிவு செய்தனர்.