கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதி இன்று முற்றாகத் தடைப்பட்டது.
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார நுகர்வோர் சங்கம் திவுலப்பிட்டி பகுதியில் இன்று முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி தடைச் செய்யப்பட்டது என்று போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் பௌத்த பிக்கு உட்பட 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பேரணியின் ஆரம்பத்தில், பேரணியை நடத்தக் கூடாது எனப் பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இதன்போது, கலவரமாக நடந்துகொண்ட மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட குழுவினரைப் பொலிஸார் கைது செய்தனர். இதன்போது அங்கு பதற்றம் நிலவியது.
கைதானவர்கள் திவுலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.