திருகோணமலை விமான தளத்தில் ஹெலிகொப்டரில் வந்திறங்கிய நிர்மலா சீதாராமனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் எல்.எல். அனில் விஜயஶ்ரீ, மாவட்ட அரச அதிபர் சாமிந்த ஹெட்டியாய்ச்சி மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தவிசாளர் ஏ.பி.மதனவாசன் ஆகியோர் வரவேற்றனர்.
நாளை திருகோணமலையில் இந்திய வங்கிக் கிளை ஒன்றைத் திறந்து வைக்கும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை காலை திருக்கோணேஸ்வரம் கோயிலில் வழிபாடு செய்ய்வார்.
அதன் பின்னர் ஹெலிகொப்டரில் கொழும்பு புறப்படும் அவர் மதியம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரைச் சந்திப்பார்.
நாளை மாலையில் இ.தொ.கா. நடத்தும் ‘மலையகம் – 200’ நிகழ்வில் அவர் பங்குபற்றுவார்.
நாளைமறுதினம் காலையில் கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் வடக்கே புறப்படும் அவர் யாழ்ப்பாணம் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பலாலியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புவார்.