மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருகோணமலையில் இந்திய அரச வங்கியொன்றின் கிளை ஒன்றை இன்று திறந்து வைத்தார்.
இந்த வங்கியில் முதல் கணக்கைக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடக்கி வைத்தார். அதற்கான வைப்புப் புத்தகத்தை நிர்மலா சீதாராமன், செந்தில் தொண்டமானிடம் கையளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மாலை கொழும்பில் நடைபெறும் ‘நாம் 200’ என்ற தேசிய நிகழ்வில் பிரதம அதிதியாகப் பங்கேற்றுள்ளார்