செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் நிர்மலாவுக்கு அமோக வரவேற்பு!

யாழில் நிர்மலாவுக்கு அமோக வரவேற்பு!

1 minutes read
இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று யாழ்ப்பாணம் வந்தார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சிறப்பு விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நவம்பர் முதலாம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இந்நிலையில், அவர் இன்று யாழ்ப்பாணம் வந்தார்.

முற்பகல் 10.15 மணியளவில் இந்திய நிதி உதவியில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தைப்  பார்வையிட்ட அவர், பாடசாலை மாணவர்களின் கண்டுபிடிப்புக்கள் அடங்கிய கண்காட்சியையும் பார்வையிட்டார். மேலும் கலாசார மண்ட சரஸ்வதி அரங்கில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார்.

இதன்போது இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தைப் பார்வையிட்ட அவர், அங்குள்ள சரஸ்வதி, வள்ளூவர் சிலைகளுக்கும் மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.

பின்னர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இந்திய நிதி உதவியில் அமைக்கப்பட்ட இந்தியன் கோனரையும் அவர் பார்வையிட்டார். அங்குள்ள முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் சிலைக்கும் அவர் மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.

முற்பகல் 11.15 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் அவர் கலந்துகொண்டார்.

இதன்போது அங்கு கூடியிருந்தவர்களிடம் நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகரின் பெயர் என்ன என்று கேள்வி எழுப்பினார். அங்கிருந்தவர்கள் வைகுந்த குருக்கள், பிரசன்னா குருக்கள் என்றனர்.

அதன் பின்னர் பிரசன்னா குருக்கள் உலகளவில் தற்போது ஹீரோ என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஆலய மஹோற்சவத்தின் போது கட்டியம் கூறுவதையும் புகழ்ந்து பாராட்டினார்.

பிற்பகல் 12.20 மணியளவில் யாழ்ப்பாணத்தில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையையும் (இந்தியாவின் மிகப் பெரும் அரச வங்கிக் கிளை) இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்துவைத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More