அரபு நாடுகளின் இஸ்ரேலுடனான ஒப்பந்தங்கள்: பாலஸ்தீனத்தை சிதைக்கும் அகண்ட இஸ்ரேல் திட்டம்:
——————————————————-
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டான், பின்னர் அரபு எமிரேட்ஸ் இஸ்ரேலுடன் செய்த அமைதி ஒப்பந்தங்களால், சமாதானத்தை பேணுவதாக இஸ்ரேல் வெளி உலகிற்கு காட்டிக் கொண்டாலும், சிறிது சிறிதாக பாலஸ்தீன தாயகம் சிதைக்கப்பட்டது என்பதே உண்மையாகும். இந்த உடன்படிக்கைகளின் மூலமே அகண்ட இஸ்ரேல் திட்டத்தை விரிவாக்கி வருகிறது)
நீண்டகால பகைமை கொண்ட பாலஸ்தீன – இஸ்ரேல் முரண்பாடு மேலும் வலுவாகி, தற்போது பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு, தீவிரமான முற்றுகைப் போர் காசாவில் நடைபெறுகிறது. பாலஸ்தீனத்தை சிதைத்து அகண்ட இஸ்ரேல் திட்டத்தை விரிவுபடுத்த இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.