லண்டன் அபியகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியில் இடர்படும் மாணவர்களுக்கான விசேட மேலதிக வகுப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் திரு பசுபதி ரவீந்திரநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் செயலாளர் திரு பிரதீபன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார்.
அத்துடன், நிகழ்வுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆசிரியரும் கவிஞருமான தீபச்செல்வன் கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய பேசிய எழுத்தாளர் தீபச்செல்வன், இந்த திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் பயன்பெறுவதே இந்த நிகழ்வுத் திட்டத்திற்கான பொறுப்பும் நம்பிக்கையும் என்று தெரிவித்தார்.
இதேவேளை குறித்த நிகழ்வில் யாழ் பல்கலைகழக மாணவன் லம்போ கண்ணதாசன், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்க்ள, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இடர்படும் மாணவர்களுக்கான விசேட வகுப்பில் மாணவர்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படுவதுடன் விசேட ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டு ஊதியமும் வழங்கப்படவுள்ளது.
அபியகம் முன்னெடுக்கும் இடர்படும் மாணவர்களுக்கான வகுப்பு கடந்த ஆண்டு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றியளித்த நிலையில், இந்த ஆண்டுக்கான வகுப்பும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.