பலாங்கொடை, கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போயிருந்த நான்கு பேரும் இன்று (14) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரண்டு பிள்ளைகள் மண்சரிவில் சிக்கி கடந்த 12 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்தனர்.
காணாமல்போனவர்களைத் தேடும் பணிகளைப் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
இரண்டாவது நாளாகவும் இன்று தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், காணாமல்போயிருந்த நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.