இரத்தினபுரியில் தந்தையை அவரது மகன் அடித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தில் பணம் தொடர்பான வாக்குவாதத்தில் தாக்கப்பட்ட 72 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை, இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி, ஓபநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த அமரசிங்க என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி மதியம் வீட்டில் தாய், தந்தை மற்றும் மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது மகன் கோடரிப் கைப்பிடியால் தந்தையைப் பலமுறை தாக்கினார்.
சம்பவத்தில் காயமடைந்த தந்தை 1990 அம்புலன்ஸ் சேவை ஊடாக இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்தார் என்று ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மகன் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.