செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உயிரிழந்த இளைஞரின் உடலைத் தாங்கியவாறு நீதி கோரிப் போராட்டம்!

உயிரிழந்த இளைஞரின் உடலைத் தாங்கியவாறு நீதி கோரிப் போராட்டம்!

1 minutes read
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞரின் உடலைத் தாங்கியவாறு சித்தங்கேணி சந்தியில் நீதி கோரிப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞர் நாகராசா அலெக்ஸின் இறுதிக்கிரியை அவரின் இல்லத்தில் இன்று நடைபெற்றது.

இந்த இளைஞரின் இறுதிகிரியையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

அலெக்ஸின் மரணமானது வட்டுக்கோட்டை பொலிஸாரின் கோர முகத்தை எடுத்துக் காட்டுவதுடன், சம்பந்தப்பட்ட பொலிஸார் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது அப்பகுதியில் ஒரு கொதி நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்தும் கண்டனங்களை வெளிப்படுத்தியும்  வருகின்றனர்.

இவ்வாறான சூழலிலேயே இன்று உயிரிழந்த இளைஞரின் உடலுடன் நீதி கோரிப் போராட்டம் இடம்பெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More