மின்சாரம் தாக்கித் தந்தையும், மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சோக சம்பவம் கம்பளை, கொத்மலை – கொடகேபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
32 வயதான தந்தையும், 2 வயது 10 மாதங்கள் நிரம்பிய மகளுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் கம்பளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
தமது தோட்டத்துக்குப் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்குண்டே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கம்பளையில் இருந்து சற்றுத் தொலைவிலேயே கொத்மலை டேம் பகுதி அமைந்துள்ளது. அதனைச் சூழவுள்ள பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.