கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் சேதவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களைக் கிராண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு 14 மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த 18 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கொலையைச் செய்த சந்தேகநபர்கள், உயிரிழந்தவரிடம் கையடக்கத் தொலைபேசியைக் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்தவரை சந்தேகநபர்கள் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.