ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சிறு கட்சிகளை வளைத்துப் போடுவதற்கான முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளார் என்று தெரியவருகின்றது.
இதற்கான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும், ஜனவரி மாதம் சிறு கட்சிகளுடன் ஜனாதிபதி நேரில் பேச்சு நடத்தவுள்ளார் என்று அறியமுடிகின்றது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதாகவும், அதற்கு ஆதரவு வழங்குமாறும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிடம் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்காது, தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான ஏற்பாடுகளை மொட்டுக் கட்சி செய்து வரும் சூழ்நிலையிலேயே மொட்டுக் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளை வளைத்துப் போடுவதற்கான வியூகத்தை ஜனாதிபதி அமைத்துள்ளார்.
அத்துடன், மலையகத்தில் உள்ள சிறு கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.