செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

1 minutes read

2023 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் பரீட்சை எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 258 பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தரப் பரீட்சை இடம்பெறுகின்றது.

இதன்படி 3 இலட்சத்து 46 ஆயிரத்து 976 பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர் என்று பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அவர்களில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 445 பாடசாலை பரீட்சார்த்திகளும், 65 ஆயிரத்து 531 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்குப் பரீட்சை திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன இணைந்து புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளன.

அதற்கான விசேட ஒருங்கிணைப்புப் பொறிமுறை தயாரிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்கள் உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, பசறை, பொலனறுவை, கெக்கிறாவ மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுமாயின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற இலக்கத்துக்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கோ தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், பரீட்சைக் காலங்களில், மேலதிக வகுப்புக்களை நடத்த வேண்டாம் என்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஜீவராணி புனிதா வலியுறுத்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More