“இவ்வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின் நளின் பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:-
“ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றி எமக்கு நன்கு தெரியும். அவர் ஆய்வின் அடிப்படையில் அரசியல் நடத்துபவர். ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி முற்பகுதியில் அவருக்குக் கிடைக்கப் பெறும் ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, நிச்சயம் நாடாளுமன்றத் தேர்தலே ஏப்ரல் மாதத்துக்குள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். ஐக்கிய மக்கள் சக்தியைத் தவிர மாற்றுக் கூட்டணியொன்று இல்லை.” – என்றார்.