இனவாதமற்ற கூட்டணியாகவே ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி மலரும் எனவும், எந்தவொரு தரப்புடனும் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், மேலும் கூறியதாவது:-
“தூய்மையான அரசியல்வாதிகளே எம்முடன் இணைந்து வருகின்றனர். எதிர்காலத்திலும் மேலும் சிலர் இணையவுள்ளனர். பலமான – பரந்தபட்ட கூட்டணியை விரைவில் அமைத்துத் தேர்தலை எதிர்கொள்வோம்.
வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றோம். எந்தவொரு தரப்புடனும் இரகசிய உடன்படிக்கை இல்லை. அவ்வாறான இரகசிய உடன்படிக்கை தொடர்பில் எவரும் கோரிக்கை விடுக்கவும் இல்லை.
எமது கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸதான்.” – என்றார்.