வற் வரி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சஜித் பிரேமதாஸ தலைமையிலானா ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடை அணிந்து இன்று (09) நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றிருந்தனர்.
2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமானது.
இதன்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுப்பு ஆடை அணிந்து சபைக்கு வந்திருந்தனர்.
அரசின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர்கள், தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தினர்.