கொழும்பு, நவகமுவ பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம், தெரியாத துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுகாப்புப் பணியாளர்கள் போன்று வேடம் தரித்த சந்தேகநபர்கள், உயிரிழந்த நபரின் வீட்டுக்கு நேற்று இரவு சென்றுள்ளனர்.
அதன்பின்னர், மேற்படி நபரை அப்பகுதியிலுள்ள வயலுக்குக் கடத்திச் சென்று துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், சிகிச்சைகளுக்காக அத்துருகிரிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நவகமுவ, வெலிபில்லேவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.