சைக்கிளில் சென்ற நபர் கீழே வீழ்ந்து கழுத்து முறிந்து உயிரிழந்துள்ளார்.
42 வயதான மேற்படி நபர் யாழ். தெல்லிப்பழையில் சைக்கிளில் சென்ற நிலையில் திடீரென கீழே வீழ்ந்து கழுத்து முறிந்து தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு நேற்று உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனையில் கழுத்து எலும்பு முறிந்தமையே உயிரிழப்புக்குக் காரணம் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.