நாட்டில் வெவ்வேறு இடங்களில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்காலை மற்றும் சூரியவெவ ஆகிய பகுதிகளில் இந்தக் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தங்காலை – குடாவெல்ல பகுதியில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை மேற்படி நபரின் வீட்டுக்குள் நுழைந்த சிலர் அவரைத் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சூரியவெவ – பெத்தேவெவ பகுதியில் நேற்று 38 வயதான பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குலுக்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.