16
புளொட் அமைப்பின் சிரேஷ்ட உப தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளருமான ஆர்.ஆர். என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) நேற்று காலமானார்.
புளொட் அமைப்பின் மூத்த போராளியான ஆர். ஆர். 1980 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தனது வாழ்வின் பெரும் பகுதியை தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் அர்ப்பணித்தவராவார்.
இவர் மாலைதீவு மீதான புளொட் அமைப்பின் தாக்குதலில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.