4
பிறந்து ஐந்து நாட்களேயான ஆண் குழந்தை தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.
இந்தப் பரிதாப சம்பவம் பலாங்கொடை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்னவள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.